28 ஆண்டுகளுக்கு பிறகு கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கு : பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு ஆயுள் தண்டனை

28 ஆண்டுகளுக்கு பிறகு கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரிக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோட்டயம்:

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த கேரள கன்னியாஸ்திரி அபயா(19), கடந்த 1992ம் ஆண்டு மார்ச் 27 ம் தேதி செயின்ட் பயஸ் கான்வென்டில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இதுகுறித்து கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அபயா தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை முடித்தனர்.அதன் பிறகு சிபிஐ விசாரணையில் தற்கொலை என முடிவாக,2 வது முறை சிபிஐ விசாரணையில் கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

3 வது சிபிஐ நடத்திய விசாரணையில், கன்னியாஸ்திரி அபயாவை கொலை செய்த சம்பவத்தில் பாதிரியார்களான தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருகெயில், கன்னியாஸ்திரி செபி ஆகிய 3 பேரையும் கைது செய்தது.இவர்களை சிபிஐ விசாரித்தபோது கன்னியாஸ்திரி செபியுடன், பாதிரியார்கள் இருவரும் தகாத உறவு வைத்துள்ளனர் .இதை பார்த்த கன்னியாஸ்திரி அபயா எங்கே வெளியே சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் கொன்று விட்டதாக தெரியவந்துள்ளது.

Read more – சபரிமலையில் இன்று முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதி : தேவஸ்தான துறை அமைச்சர் தகவல்

ஏற்கனவே,2018 ம் ஆண்டு ஜோஸ் புத்ருகெயில் விடுதலை ஆன நிலையில், இன்று மீண்டும் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.அதில், கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோரை முக்கிய குற்றவாளிகளாக அறிவித்து இதற்கான தண்டனை வரும் 23 ம் தேதி வெளியாகும் என்று உத்தரவிட்டது.

அதற்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version