சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டது. இந்த கல்வியாண்டில் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு மாணவ – மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா அச்சத்தின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இறுதித்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
Read more – தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர்களுக்கு இனி தனி நலவாரியம் : தமிழக அரசு அரசாணை வெளியீடு
ஆண்டுதோறும் மாநில பாடத்திட்ட தேர்வுகளுக்கு முன்பாக சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். எனவே சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பொதுத்தேர்வுக்கான தேதியை எதிர்நோக்கி இருந்தனர். இதுதொடர்பாக கடந்த மாதம் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில், சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை 6 மணிக்கு தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.