அதிகரிக்கும் கொரோனா..நாடு முழுவதும் பள்ளிகளை திறக்க மத்திய அரசு மீண்டும் தடை..

நாடு முழுவதும் பள்ளிகளை திறக்க, மத்திய அரசு மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதேசமயம், மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக அவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, ஊரடங்கில் படிப்படியாக அறிவிக்க தளர்வுகளின் படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிகளில் ஆசிரியரின் ஆலோசனை பெறலாம் என மத்திய அரசு தெரிவித்தது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் தவிர்த்து விருப்பமுடைய மாணவர்கள், பெற்றோரின் அனுமதி பெற்ற பிறகு
பள்ளிக்கு வர மத்திய அரசு அனுமதி அளித்தது.

மேலும், வகுப்பறையில் மாணவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். பள்ளிகளில் எச்சில் துப்பக் கூடாது. ஆல்கஹால் கலந்த கிருமி நாசினி பயன்படுத்த கூடாது உள்ளிட்ட, பள்ளிகள் திறப்பது தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், செப்டம்பர் 30 வரை பள்ளிகளை திறக்க தடை என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, புது உச்சத்தை தொடும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version