பெயர் இல்லாமல் வரும் ஊழல் புகார்கள் மீது இனி நடவடிக்கை எடுக்க தேவையில்லை – மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்

பெயர் இல்லாமல் வரும் ஊழல் புகார்கள் மீது இனி நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பெயர் இல்லாமல் வரும் ஊழல் புகார்கள் மீது இனி நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று அனைத்து அரசு துறைகளுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ஊழல் புகார்களை விசாரிப்பது தொடர்பாக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை அனைத்து ஊழல் கண்காணிப்பு தலைமை மற்றும் நிர்வாக அதிகாரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும்,அந்த வழிகாட்டுதல்களை மீறியது தெரிய வந்தால், அதுகுறித்து தீவிரமாக கவனத்தில் மேற்கொள்ளப்பட்டு இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version