இன்னும் ஒரு மாதத்திற்குள் 44 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்படும் : டெல்லி முதல்வர் உறுதி

டெல்லியில் இன்னும் ஒரு மாதத்திற்குள் 44 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்படும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற முக்கிய காரணங்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. மேலும், தலைநகர் டெல்லியில் டெல்லியில் நேற்று முன்தினம் ஒரே மருத்துவமனையில் இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த மோசமான சூழலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது : டெல்லியில் இன்னும் ஒரு மாதத்திற்குள் 44 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்படும். அதில், டெல்லி அரசு சார்பில் 36 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளும், மத்திய அரசு சார்பில் 8 ஆலைகளும் அமைக்கப்பட இருக்கிறது என்று தெரிவித்தார்.

Read more – 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி : இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

மேலும், பிரான்சில் இருந்து பயன்படுத்த தயார் நிலையில் உள்ள 21 ஆக்சிஜன் உற்பத்தி சாதனங்களை மத்திய அரசிடம் இருந்து அவசர உதவிக்கு வாங்க இருப்பதாகவும், மற்ற மாநில முதல்வர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு ஆக்சிஜன் வழங்க கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version