மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஏற்கனவே 28 சதவீதம் உயர்வு அமல்படுதப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இன்று வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கைகள் அகவிலைப்படி 28%-ல் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்திற்கு முன்பு வரை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவிகிதமாக இருந்த நிலையில் அதனை ஜூலை மாதம் முதல் 28 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இந்த 28 சதவீதத்தை தற்போது மேலும் 3 சதவிகிதம் அதிகரித்து 31 சதவிகிதமாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் ஓய்வூதியதரர்களும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 வருடத்தில் 5வது முறையாக மத்திய அரசு ஊளியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. 2020 ஜனவரி மாதம் 4 சதவீதம் ,அதே ஆண்டு ஜூன் மாதம் 3 சதவீதம் , 2022 ஜனவரி மாதத்தில் 4 சதவீதமாகவும், ஜூன் மாதம் 11 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு மொத்தம் அகவிலைப்படி 28 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் கூடுதலாக 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக கடந்த மாதமே தகவல் வெளியான நிலையில் இன்றைய அமைச்சரவையில் அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.ஆகவே மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்-களுக்கு 31 சதவீதமாக வழங்கப்படும் எனவும் இவை 2021 ஜூலை 1ம் தேதி முதல் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.