144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்காது : புதுச்சேரி கலெக்டர் பூர்வா கார்க்

புதுச்சேரியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் வாக்குப்பதிவு பாதிக்காது என கலெக்டர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி :

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (ஏப்ரல்.6) சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் நேற்று இரவு 7 மணியுடன் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டனர். இதையடுத்து, புதுச்சேரியில் நேற்று இரவு 7 மணி முதல் வருகிற 7 ம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவை மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, 144 தடை உத்தரவை எதிர்த்து பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த 144 தடை உத்தரவால் பொதுமக்கள் வாக்களிக்க முன்வர மாட்டார்கள் என்று ர்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் வழக்கு தொடர்ந்தார்.

அவசர வழக்காக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் காணொளி காட்சி மூலம் விசாரித்தனர். தொடர்ந்து, அரசு தரப்பில் உரிய காரணமும், விளக்கமும் அளிக்கவில்லை. பொதுமக்களுக்கு உரிய விளக்கம் அளிக்கவேண்டும் இல்லையெனில், 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

Read more – வாக்களிக்க வேண்டுமா ? இலவசமாக பயணம் மேற்கொள்ளுங்கள்… அதிரடி சலுகை வழங்கிய உபர்

இதுகுறித்து விளக்கமளித்து கலெக்டர் பூர்வா கார்க் சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில், 144 தடை உத்தரவு வாக்களிப்பதை பாதிக்காது எனவும், கூட்டமாக சென்றோ, உறவினர்கள், நண்பர்களுடன் சென்றோ வாக்களிப்பதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

Exit mobile version