பிரதமர் தலைமையில் ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் 9 இடங்களில் தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு நடைபெற்ற இந்தத் தாக்குதலில் நூறுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிரதமர், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட நாட்டின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் இந்தத் தாக்குதலானது நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட பாதுகாப்பு மற்றும் தாக்குதல் தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது.

Exit mobile version