தாயை கொன்று எரித்த தீயில் கோழி கறி சமைத்து சாப்பிட்ட மகன் : ஜார்கண்டில் நடந்த கொடூர சம்பவம்

மதுபோதையில் தாயை கொலை செய்த மகன், அவரை எரித்த தீயில் கோழி கறி சமைத்து சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் :

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிரதான் சாய் (35) வயது என்ற நபர் 60 வயதான சுமி சாய் என்ற தாயுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். பிரதான் சாய் தினமும் குடித்து விட்டு வந்து தந்து தாயுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

வழக்கம் போல் பிரதான் சாய் குடித்துவிட்டு வீட்டுக்கு வர அவரை கண்டித்த தாய், குடித்தால் வீட்டுக்கு வர வேண்டாம் என்று தடுத்துள்ளார். இந்நிலையில் இருவருக்குமான வாக்குவாதமானது வன்முறையாக மாறியுள்ளது. அளவுக்கு அதிகமான போதையில் பிரதான் சாய் அவரதுதாய் சுமி சாயை அருகில் இருந்த கட்டையை கொண்டு தாக்கியதில் இடத்தில் உயிரிழந்துள்ளார்.

Read more – ஓடும் ரயிலில் ஆயிரத்திற்கு அதிகமான துப்பாக்கி குண்டுகள் கடத்தல் : மிரண்டுப்போன ரயில்வே போலீஸ்

அதன்பிறகு, பிரதான் சாய் தனது தாயின் உடலை வீட்டு வாசலில் எரித்து அந்த தீயில் கோழி கறியை சமைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அக்கம்பத்தினர் அளித்த புகாரின் பெயரில் பிரதான் சாயை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version