
இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்தபோது மக்களிடம் ஹெச்.ஐ.வி கிருமித் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆர்.டி.ஐ வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்புக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார். அதன்மூலம் ஊரடங்கு காலத்தில் 85,000-க்கும் மேற்பட்டோர் ஹெச்.ஐ.வி தொற்றுக்கு ஆளானது தெரியவந்தது.
ஹேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு வெளியிடுள்ள தகவலின் படி, மகாராஷ்டிராவில் 10,498 பேருக்கும் ஆந்திராவில் 9521 பேருக்கும் கர்நாடகாவில் 8947 பேருக்கும் ஊரடங்கு காலத்தில் ஹெச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
முந்தைய ஆண்டுகளை விடவும் இது எண்ணிக்கையில் குறைவு தான். எனினும், மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தில் மக்களிடையே அதிகரித்துள்ள இந்த எண்ணிக்கை விழிப்புணர்வு எச்சரிக்கையை அரசுக்கு வழங்கியுள்ளது.
