இந்தியாவில் 15 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!!!

கொரோனா வைரஸ் நோயினால் பலர் உயிரிழந்துவரும் நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1 கோடியே 14 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தற்போது இந்தியாவில் அதி தீவிரமாக பரவிவருகிறது உலகிலேயே கொரோனா தொற்றின் வேகம் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,31,669 ஆக உயர்ந்துள்ளது. அதேப்போல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,193 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அதிக அளவாக 48,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 654 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர், இதுவரை 9,88,029 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தொற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் விரைவில் இந்தியா, கொரோனா தொற்றில் வேகம் அதிகமாக இருப்பதால் விரைவில் 16 லட்சத்தை எட்டும் என அஞ்ச படுகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்த படியாக தமிழ்நாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version