சட்டசபையில் முதல்அமைச்சருக்கு அருகில் அமர்ந்திருந்த துணை முதல் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!.

கர்நாடக மாநிலத்தில், சட்டசபை கூட்டத்தொடரின் போது முதலமைச்சருக்கு அருகில் அமர்ந்திருந்த மேலும் ஒரு துணை முதல்அமைச்சருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த திங்கள் கிழமை முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் மாநிலத்திற்கு தேவையாக பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சருக்கு அறிவித்துவருகிறார். இந்த நிலையில் தான் முதலமைச்சருக்கு அருகில் அமர்ந்திருந்த துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோலுக்கு கொரோனா தொற்று தற்போது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த சனிக்கிழமை கர்நாடகாவின் மற்றொரு துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சட்டசபையில் கலந்து கொண்ட இரு துணை முதலமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் மற்ற அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version