பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு பரவுகிறதா புதிய கொரோனா ? லண்டனிலிருந்து டெல்லி திரும்பிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நேற்று இரவு லண்டனிலிருந்து டெல்லி திரும்பிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

இங்கிலாந்து நாட்டில் வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வைரஸானது சூழ்நிலைக்கு தகுந்தார் போல வளர்சிதை மாற்றம் அடைந்தும், இதன் பரவும் தன்மை 70 சதவீதம் அதிகம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டிபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் காணப்படும் நகரங்களான லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் இங்கிலாந்து நாட்டிற்கு செல்லும் விமான போக்குவரத்துக்களை பல்வேறு தடைகள் விதித்துவருகின்றனர். இந்தியாவிலும் விமான போக்குவரத்து சேவை இன்று இரவு முதல் வருகின்ற 31 ம் தேதி வரை தடை அமலுக்கு வருகிறது. நேற்று இரவு லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 266 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Read more – 28 ஆண்டுகளுக்கு பிறகு கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கு : பாதிரியார் உள்பட மேலும் ஒரு கன்னியாஸ்திரி குற்றவாளியாக அறிவிப்பு

மேலும், அவர்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட 5 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, தற்போது அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version