கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் நிதி போதவில்லை – அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் நிதி போதுமானதாக இல்லை என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக தொடரும் நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசின் நிதி போதுமானதாக இல்லை என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க எம்.பி. தம்பி துரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “கொரோனா தொற்றால் பல சோதனைகள் ஏற்பட்ட நிலையில் தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதவில்லை. தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.9000 கோடி வரை தேவைப்படுகிறது. தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version