கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்?? பிரதமர் மோடியின் நம்பிக்கை பேச்சு…

கொரோனா தடுப்பூசி இன்னும் ஒரு சில வாரங்களில் கிடைக்கும் என்று, இன்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
PM Narendra Modi

கொரோனா நடவடிக்கைகள் குறித்தான அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம், பிரதமர் மோடி தலைலையில் இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ள கொரோனா தடுப்பூசிகள் குறித்தும், அந்த தடுப்பூசிகளை யாருக்கெல்லாம் செலுத்துவது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தடுப்பூசி வழங்குவதில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது பற்றியும், கொரோனா தடுப்பூசிகளை குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாப்பது போன்ற முக்கிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக்கூட்டத்தின் இறுதியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் தற்போது மொத்தம் 8 தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளதாகவும், இன்னும் சில வாரங்களில் தடுப்பூசி தயாராகும் என வல்லுநர்கள் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, சீக்கிரமாகவே இந்தியாவில் பாதுகாப்பான மற்றும் மிக குறைந்த விலையில் தடுப்பூசி நிச்சயமாக கிடைக்கும்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். மேலும், விஞ்ஞானிகள் அனுமதி அளித்தவுடன் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் தொடங்கும் எனவும், முன்கள பணியாளர்கள், முதியவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அனைத்துக் கட்சி தலைவர்களும், தங்களின் கருத்துகளை எழுத்துப்பூர்வமாக அனுப்பி வைக்குமாறும், அவ்வாறு அனுப்பப்படும் அனைத்து கருத்துகளும் தீவிரமாக பரிசீலனை செய்யப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஹர்ஷவர்தன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள் : வகுப்பறையில் திருமணம் செய்து கொண்ட ஸ்டூடண்ட்ஸ் : அதிர்ச்சியில் பேரண்ட்ஸ்…

Exit mobile version