நோய் எதிர்ப்பு சக்தி 3 மாதம் மட்டும்தான்….கொரோனாவில் இருந்து மீண்டவர் மீண்டும் பாதிக்கப்படலாம்….அதிர்ச்சி தகவல்

நோய் எதிர்ப்பு சக்தி 3 மாதம் மட்டும்தான் இருக்கும் எனவும் கொரோனாவில் இருந்து மீண்டவர் மீண்டும் பாதிக்கப்படலாம் என அதிர்ச்சி தகவல்.

இந்தியாவில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் குறைந்து வருகிறது. இருப்பினும் பண்டிகை காலத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பிரதமர் மோடி நேற்றுத் தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது வெறும் 3 முதல் 5 மாதங்கள் வரை மட்டும்தான் செயல்படும் எனவே அவர்கள் மீண்டும் பாதிக்கப்படலாம் என ஐசிஎம்ஆர் இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்க்கவா நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது இந்த திர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ள்ளார்.

இந்தியாவில் கொரொனா பாதிப்பு 75 லட்சத்தை தாண்டியுள்ளதில், வரும் பண்டிகைக் காலங்களில் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடாமல் எச்சரிக்கையுடம், சமூக இடைவெளியைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து இருந்தால் தொறறைத் தவிர்க்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version