டெல்லி ஐஐடி தயாரித்த மலிவு விலை கொரோனா பரிசோதனை கிட்

டெல்லி ஐஐடி தயாரித்துள்ள மலிவு விலை கொரோனா பரிசோதனை கிட்டை மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய PCR கிட் பயன்படுத்தப்படுகிறது. ஆர்.என்.ஏ. ஐசோலேசன் மற்றும் ஆய்வக கட்டணத்துடன் ஒரு சோதனைக்கு சுமார் 3 ஆயிரத்திற்கு மேல் செலவாகிறது. தனியார் மருத்துவமனையில் 4 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.


இதனால் குறைந்த விலையிலான கிட்டை உருவாக்கும் பணியில் டெல்லி ஐஐடி களம் இறங்கியது. அதற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. கொரோசுயர் (Corosure) என்ற பெயரில் PCR கிட்டை தயாரித்துள்ளது.


இதற்கு ICMR மற்றும் DCGI அனுமதி அளித்துள்ளது. இதனால் மத்திய மனித வள மந்திரி ரமேஷ் போக்ரியால் இன்று கொரோனா சுயர் கிட்டை அறிமுகம் செய்து வைத்தார். இதன் விலை 399 ரூபாய் மட்டுமே. ஆய்வக கட்டணத்துடன் 650 ரூபாய் ஆகும. மற்ற கிட்டுகளை விட இதன் விலை மிகமிக குறைவு.

ICMR அனுமதித்துள்ள ஆய்வகங்களில் இந்த கிட்டுகள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. மூன்று மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும். அறிமுகம் செய்து வைத்து பேசிய மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘‘கொரோனாசுயர் சிட் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை.

மற்ற கிட்டுகளை விட மிகவும் மலிவான விலை.தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டிற்கு மலிவான மற்றும் நம்பகமான பரிசோதனை தேவைப்படுகிறது’’ என்றார்.

Exit mobile version