இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1021 ஆகும்.
சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா என்னும் கொடிய நோய்த்தொற்று எட்டு மாதங்களாக உலகையே உலுக்கி வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
மருந்துகளோ தடுப்பூசிகளோ கண்டுபிடிக்காத நிலையிலும், இந்தியாவில் கொரோனாவின் கோர பிடியிலிருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து நமக்கு நம்பிக்கை அளித்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தியாவில் ஒரே நாளில் 76,742 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 34,63,973 ஆகும்.
இதுவரை 7,52,424 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 26,48,999 பேர் தகுந்த சிகிச்சையினால் தொற்று
பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 1021 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதார துறை அறிவிப்பின்படி இதுவரை இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை4 கோடியே 4 லட்சத்து 6 ஆயிரத்து 609 ஆக உள்ளது இதனால் இந்தியாவில் பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியை கடந்தது.