விவசாயிகளிடம் இருந்து நிலங்களை யாரும் எடுத்து செல்ல முடியாது என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லி :
விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு ஒரு மாதத்திற்கும் கூடுதலாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். விவசாயிகளுடன் அரசு அதிகாரிகள் நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்தது. விவசாயிகள், மத்திய அரசின் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பற்றி தங்களுக்குள் கலந்துரையாடல் நடத்தினார்கள். சில விவசாய அமைப்பினர் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடரலாம் என்று தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக வரும் 29ந்தேதி காலை 11 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி கேட்டுள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வகை செய்யும் சட்டம் இயற்றுவதற்கான நடைமுறைகளை செயல்படுத்துவது ஆகிய 2 விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என கூறியுள்ளார்.
Read more – முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா மூலம் பரவிய கொரோனா : 18 பேர் பலி
மாநில மக்களுக்கு காணொலி காட்சி வழியே மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்பொழுது,
விவசாயம் பற்றி தெரியாதவர்கள் கூட ஒன்றுமறியாத விவசாயிகளை தவறாக வழி நடத்துகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தினை (எம்.எஸ்.பி.) நிறுத்தும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை. வருங்காலத்திலும் நிறுத்தப்படாது. மண்டிகளும் தொடர்ந்து செயல்படும்.அதனால், எம்.எஸ்.பி. திட்டம் தொடரும். விவசாயிகளிடம் இருந்து நிலங்களை யாரும் எடுத்து செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.