விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உண்ணாவிரதம்

விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் 19 வது தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தையில் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.மத்திய அரசுக்கு எதிராக இந்த போராட்டத்தினை மேலும் தீவிர படுத்துவதற்காக விவசாய அமைப்பினர்களின் தலைவர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தை காலை 8 மணிக்கு தொடங்கி,மாலை 5 மணி வரை செயல்படுத்த இருக்கின்றனர்.

Read more – நாட்டை துண்டாட நினைக்கும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை

இந்த நிலையில் நேற்று இணையவழியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது,மத்திய அரசு தனது ஆணவத்தை கைவிட்டு 3 வேளாண் மசோதா சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் மசோதாவை கொண்டுவர வேண்டும்.மேலும் விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றி தரவேண்டும் என்று தெரிவித்தார்,

அதனைத்தொடர்ந்து விவசாயிகளின் ஆதரவாக திங்கட்கிழமை (இன்று)ஒருநாள் மட்டும் நான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். ஆம் ஆத்மி தொண்டர்களும், பொதுமக்களும் அதில் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அதன்படி இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

Exit mobile version