கிரெட்டா தன்பெர்க் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு

விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவாக ட்வீட் செய்த கிரெட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது

இளம்வயது சூழலியல்  செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க்கின் ட்வீட் மதத்தின் அடிப்படையில் பகைமையை ஊக்குவிப்பதாக டெல்லி காவல்துறை ” குற்றம் சாட்டியிருக்கிறது. “இந்தியாவில் #FarmersProtest உடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம்,” என்று அவர் நேற்று ட்வீட் செய்தார். போராட்டம் நடைபெறும் இடத்தில் அரசாங்கம் இணைய சேவையை கட்டுப்படுத்துவது பற்றிய செய்தியையும் அவர் பகிர்ந்து கொண்டார். விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவாக பிப்ரவரி 13, 14 தேதிகளில் இந்திய தூதரகம் அருகே போராட்டங்கள் நடத்தவும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார். இதனால் இந்திய விவசாயிகள் போராட்டம் உலக அளவில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இதுபோன்ற போராட்டங்களில் கருத்து தெரிவிப்பதற்கு முன் அதன் உண்மைத்தன்மைையை தெரிந்து கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறது.

Exit mobile version