காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் எதிரொலி… துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா இன்று டெல்லியில் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
சமீப நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் சுட்டு கொல்லப்பட்டு வரும் நிலையில் ஒரு வாரத்தில் மட்டும் 7 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பயங்கரவாத தடுப்பு குழுவின் தலைவர் தபன் தேகா தலைமையிலான குழு தீவிரவாதிகளை தேடி வருகிறார்கள். அண்மை நாட்காளாக எல்.சி (எல்லை கட்டுப்பாடு கோடுகள் ) பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. மற்றொரு பக்கம் அவ்வப்போது டிரோன் மூலமாக இந்திய-பாகிஸ்தான் எல்லையை தாண்டி ஐஇடி ( வெடிபொருள் ) கடத்தப்படுவதும் அதிகரித்து வரும் நிலையில் தீவிரவாதிகளின் கண்முடித்தனமா துப்பாக்கிசூடு என்பது ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலையை கேள்வி குறியாக்கி உள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர் மனோஜ் சின்கா இன்று டெல்லி வருகிறார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். சந்திப்பின் போது இப்போதைய காஷ்மீர் சூழல் மற்றும் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பார்கள் என கூறப்படுகிறது.
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பின் உதவியுடன் காஷ்மீருக்குள் சில தீவிரவாதிகள் ஊடுருவி உள்ள நிலையில் தீவிரவாதிகளை ஒடுக்க சில அதிரடி முடிவுகள் இன்றைய ஆலோசனையில் எடுக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.