கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மேகவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

கர்நாடகா:

சிக்கமகளூரு மாவட்டம் காடூரில் ரயில் தண்டவாளம் அருகே தர்மேகவுடா உடல் இன்று சடலமாக மீட்கப்பட்டது. தர்மேகவுடாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தர்மே கவுடா சடலாமாக மீட்கப்பட்ட நிலையில் அவர் ஒரு கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துள்ளார். அந்த கடிதம் குறித்தும் விசாரணையும் நடந்து வருகிறது.

தர்மேகவுடா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலையா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more – இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் : 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

மேலும், மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த துணை சபாநாயகரான தர்மே கவுடா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தபோது, அவரை வலுக்கட்டாயமாக காங்கிரஸ் கட்சியினர் அப்புறப்படுத்தினர். இதுவும் முக்கிய கரமாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தர்மேகவுடா மறைவுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Exit mobile version