அலர்ஜி இருந்தால் கோவிஷீல்டு தடுப்பூசி வேண்டாம்

அலர்ஜி இருப்பவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடாது என சீரம் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் கூட்டாக உருவாக்கி, புனே இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வழங்குகிறது. இந்த தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டு ஒப்புதலை கடந்த 3ஆம் தேதி, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அளித்தது. ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி 16ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த தடுப்பூசியில் அடங்கியுள்ள மருந்துப்பொருட்களுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) உடையவர்கள், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது. தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு முன்பாக எந்த மருந்து, உணவு, தடுப்பூசி அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியின் மருந்து பொருட்களால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால் அதுபற்றி சுகாதார பணியாளரிடம் கண்டிப்பாக தெரிவித்து விடுங்கள்.

மேலும், காய்ச்சல் இருந்தால், ரத்த கோளாறு இருந்தால், நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருந்தால், நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்தினால் நோய் எதிர்ப்புச்சக்தி குறையும் நிலை இருந்தால் அது பற்றியும் கண்டிப்பாக தெரிவித்து விட வேண்டும். பெண்கள் கர்ப்பம் அடைந்திருந்தாலும், கர்ப்பம் அடைய திட்டமிட்டிருந்தாலும், குழந்தைக்கு தாய்ப்பாலூட்டினாலும் அதுபற்றியும் முதலிலேயே தெரிவித்து விட வேண்டும். வேறு எந்த கொரோனா தடுப்பூசி போட்டிருந்தாலும் அதுபற்றியும் சுகாதார பணியாளரிடம் தெரிவித்து விட வேண்டும்.” அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version