தெலங்கானாவில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து

ஹைதராபாத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று அம்மாநில போக்குவரத்துத் துறை அறிவித்திருக்கிறது. 

மக்களின் ஆச்சர்யத்தையும், குறிப்பாக இளைஞர்களின் ஆர்வத்தைத் தூண்டியது இரட்டை அடுக்கு பேருந்துகள். இப்பேருந்தின் மேல்தளத்தில் ஏறி சவாரி செய்ததை பலரும் மகிழ்ச்சியாக நினைவுக்கூர்ந்து வருகிறார்கள். சுமார் இருபது ஆண்களுக்கு முன்புவரை இந்த சாலைகளில் இப்பேருந்துகள் இயங்கின. இப்போது இந்நகரில் மீண்டும் டபுள்-டெக்கர் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.  இதுபோன்றபாரம்பரிய போக்குவரத்து முறைகளை படிப்படியாகக் கொண்டுவருவது நிச்சயமாக மக்களிடம் வரவேற்பை பெறும் என அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில் இந்த இரட்டை அடுக்கு பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வரும் மாதங்களில் ஹைதராபாத் நகர சாலைகளில் அவை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அனுபவமிக்க உற்பத்தியாளர்களிடமிருந்து 25 இரட்டை-டெக்கர் பேருந்துகளை வாங்குவதற்காக தெலங்கானா ஆர்டிசி டெண்டர்கள் வழங்கியுள்ளது.

Exit mobile version