வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்.. இறுதி வாய்ப்பை தவற விடாதீர்கள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

2019 – 2020 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மார்ச் 31ம் தேதியுடன் நிறைவு பெற்றது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்தால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அதன்படி, செப்டம்பர் 30ம் தேதி வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நவம்பர் 30ம் தேதி வரை அந்த அவகாசம் நீட்டிக்கப்படுதாக  வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

வரி ஆதாய நடவடிக்கைகளால், வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது 2018ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கொரோனாவால் அவகாசம் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையும் தவறவிட்டால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததற்காக வருமானவரித் துறையின் நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும்

Exit mobile version