ஒடிசா பிப்லி சட்டசபை தொகுதிக்கு நடத்தப்பட இருந்த இடைத்தேர்தல் மே 16 ம் தெத்து நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒடிஸா மாநிலம், புரி மாவட்டத்துக்கு உள்பட்ட பிப்லி சட்டமன்ற தொகுதியில் மே மாதம் 13 ம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. ஆனால் அன்றைய நாளில் பண்டிகை கொண்டாட இருப்பதால், வேறொரு நாளில் தேர்தலை நடத்துமாறு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்ற தேர்தல் ஆணையம் மே மாதம் 13 ம் தேதி நடத்தப்பட இருந்த இடைத்தேர்தலை மே 16 ம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி எஸ்.கே.லோஹானி அறிவித்துள்ளார்.
Read more – கூண்டில் சிறைப்பட்ட புறா… பாகிஸ்தானில் இருந்து தூது வந்தாக புகார்…
மேலும், வாக்கு எண்ணிக்கை மே மாதம் 19 ம் தேதி நடைபெறும் என்றும், புதிய தேர்தல் விதிகளின்படி அனைத்து நேரடி பிரச்சாரத்திற்கும் படை விதிக்கப்பட்டு , காணொளி காட்சி மூலம் மட்டுமே பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.