5-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த முதல்வருக்கு மரணதண்டனை

பீகாரில்  5-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த முதல்வருக்கு மரணதண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பாட்னாவின் புல்வாரி ஷெரீப் என்ற இடத்தில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். விசாரணையில் பள்ளிக்கு வந்த மாணவியை அந்தப் பள்ளியின் முதல்வர் அரவிந்த குமார் மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் பள்ளியின் முதல்வர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பீகார் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் 5-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த முதல்வருக்கு மரணதண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பலாத்காரத்திற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் அபிஷேக்குமாருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Exit mobile version