ஜம்மு- காஷ்மீரில் 20 லட்சம் பரிசுத்தொகைக்காக போலி என்கவுன்ட்டர் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
ஜம்மு- காஷ்மீர் :
ஜம்மு காஷ்மீர் ஷோபியான் மாவட்ட அம்ஷிபுரா பகுதியில் கடந்த 2020 ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த என்கவுன்ட்டரில் இம்தியாஸ் அகமது, அஃப்ரார் அகமது, முகமது இப்ரார் என்ற 3 இளைஞர்கள் பயங்கரவாதிகள் என்ற அடிப்படையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், 20 லட்சம் பரிசுத்தொகைக்காக போலி என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட அந்த இளைஞர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவியதால், இதையடுத்து இந்தியா ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில் ராணுவ கேப்டன் புபேந்தர் போலி தவறாக பயன்படுத்தியதாகவும், அந்த குழுவில் இடம் பெற்றிருந்த கரு ராம், ரவி குமார், அஷ்வினி குமார், யோகேஷ் ஆகியோரது பெயர்களும் போலி என் கவுண்ட்டர் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், கேப்டன் புபேந்தர் இப்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார்.மேலும் அந்த குழுவில் இருந்த வீரர்கள் மீதும் ராணுவ நீதிமன்றம் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.