ஏ.சி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி..!!

Karnataka Vijayanaga Family
explosion at karnataka

தூங்கிக் கொண்டிருந்த போது மின்கசிவு ஏற்பட்டு ஏ.சி. வெடித்து தீ பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மாரியம்மன ஹள்ளி என்கிற கிராமத்தில் வெங்கட பிரசாந்த் (42) என்பவர் தன்னுடைய மனைவி சந்திரகலா (38), மகன் எஸ்.ஏ. அர்த்விக் (6) மற்றும் மகள் ப்ரேனா (8) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். அப்பகுதியில் வெயில் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்துள்ளது.

இதனால் எப்போதும் ஏ.சி போட்டு இரவில் தூங்குவது குடும்பத்தினரின் வழக்கமாக இருந்துள்ளது. கடந்த 7ம் தேதி இரவில் வழக்கம் போல ஏ.சி போட்டுவிட்டு அனைவரும் தூங்கியுள்ளனர். அதிகாலை 8-ம் தேதி திடீரென பயங்கர சத்தத்துடன் ஏசி வெடித்துவிட்டது.

வீடு முழுவதும் தீ பரவிய சூழலில் நால்வரும் வெளியே வர முயற்சித்துள்ளனர். ஆனால் வீட்டுக்குள் கரும்புகை சூழ்ந்துவிட்டதால் வெளியே வர முடியாமல் நால்வரும் தீயில் சிக்கிக் கொண்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த அவர்கள், பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது வெங்கட் பிரசாந்த், சந்திரகலா, எஸ்.ஏ.அர்த்விக், ப்ரேனா ஆகியோர் உடல் கருகி சடலமாக கிடந்தனர்.

உடல்களை கைப்பற்றிய காவல்துறை உடற்கூராய்வு செய்வதற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாரியம்மன ஹள்ளி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் தீப் பிடித்து விபத்து நடந்துள்ளது முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version