15 வது நாளாக தொடரும் போராட்டம் : டெல்லியை முற்றிலும் முடக்கப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி சாலைகளை முற்றிலும் முடக்கப்போவதாக விவசாய அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

புதுடெல்லி:

நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு 3 வேளாண் மசோதா சட்டங்களை நிறைவேற்றியது.இந்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 15 வது நாளாக இன்று டெல்லியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் டெல்லிக்கு செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகள் முடங்கினர்.

ஏற்கனவே விவசாய அமைப்பினர்களுடன் மத்திய அரசு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.6 ம் சுற்று பேச்சுவார்த்தையும் ரத்தானது.நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியது.அதில்,

*விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை தொடரும்.

*விவசாய மண்டிகள் குறைந்த கட்டணத்தில் தொடர்ந்து நடைபெறும்.

*விவசாய பொருள் வர்த்தகர்களை மாநில அரசு பதிவு செய்ய அதிகாரம் வழங்கப்படும்.

போன்ற 7 உத்தரவாதங்களை மத்திய அரசு விவசாயிகள் வழங்கியது.ஆனால் இதை எதையும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளாமல் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தினர்.

இதையடுத்து இந்த போராட்டத்தை தீவிர படுத்த,டெல்லிக்கு வரும் அனைத்து சாலைகளையும் முடக்கப்படும் என்றும்,12 ம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் செல்வது என்று முடிவெடுத்துள்ளனர்.மேலும் 14 ம் தேதி டெல்லியில் உள்ள பா.ஜ.க எம்.பி. எம்.எல்.ஏ. போன்ற முக்கிய நபர்களின் வீடுகளை முற்றுகையிட போவதாக அறிவித்துள்னனர்.

Exit mobile version