3 வேளாண் மசோதாக்களையும் ரத்து செய்வது தான் போராட்டத்திற்கான ஒரே தீர்வு:டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவிப்பு

3 வேளாண் மசோதாக்களையும் ரத்து செய்தால் மட்டுமே இந்த போராட்டம் முடிவடையும் என்று டெல்லியில் போராடும் விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 11 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசு ஏற்கனவே 5 முறை விவசாய அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்று வரை அதற்கான தீர்வு எட்டப்படவில்லை.

இந்தநிலையில்,டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாய அமைப்பினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திய போது,3 மசோதாக்களில் ஒன்றான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மத்திய அரசு உறுதியளித்தது.இதை ஏற்க மறுத்த விவசாயிகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களையும் ரத்து செய்வது மட்டுமே போராட்டத்திற்கான ஒரே தீர்வு.இதை மட்டும் மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், எத்தனை நாட்கள் ஆனாலும் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கும் என்று விவசாய அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

மேலும் வரும் 8-ம் தேதி விவசாய அமைப்பினர் “பாரத் பந்த்” என்ற நாடுமுழுவதும் வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு விடுத்துள்ளனர்.இந்த போராட்டத்திற்கு அழைப்பை ஏற்று பல முன்னணி கட்சி தலைவர்கள் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version