வேறு அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு டெல்லியில் போராடும் விவசாயிகள் கோரிக்கை

வேறு அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்களையும் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 21 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.இந்த போராட்டத்தினை நாடுமுழுவதும் தீவிர படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,விவசாய போராட்டத்தில் 40 க்கும் அதிகமான விவசாய அமைப்பினர்கள் டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த 40 விவசாய அமைப்பினரை சார்ந்திராத ஒரு அமைப்பு பாரதீய கிசான் யூனியன் (கிசான்) ஆகும்.இந்த அமைப்பினரை சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்தனர்.அதன்பிறகு பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்த பாரதீய கிசான் யூனியன் (கிசான்) அமைப்பினருக்கு எனது நன்றி,நாடு முழுவதும் பல்வேறு மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு இருக்கிறது.உண்மையான விவசாய அமைப்பினர்களுடன் பேசி ஒரு தீர்வை கொண்டுவர நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Read more – மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு இன்னும் இடம் தரவில்லை : மத்திய அரசு தகவல்

தற்போது,இந்த பேச்சுவார்த்தையினை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.அதில் விவசாயிகளின் போராட்டத்தை திசை திருப்பும் வகையில் வேறு அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும்.நாங்கள் இங்கு குளிர் வெயிலென பாராது கடந்த 21 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,எங்களை அழைத்து பேசாமல் விவசாய அமைப்பினரை சார்ந்திராத வேறு ஒரு அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று தொடர்ந்து விவசாயிகள் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

Exit mobile version