கோடிக் கணக்கான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்த ரகுவன்ஸ் பிரசாத் சிங் காலமானார்..

முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஸ் பிரசாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

பீகாரைச் ரகுவன்ஸ் பிரசாத் சிங், லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய கூட்டாளியும், ராஷ்டிரிய ஜனதாதளக் கட்சியின் முக்கிய தலைவராகவும் இருந்தார் . கட்சி உடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, கடந்த வியாழனன்று கட்சியில் இருந்து விலகினார்.

முன்னதாக, 2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த ரகுவன்ஸ் பிரசாத் சிங், கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை நல்கியுள்ள தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.

ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒருவாரம் சிகிச்சை பெற்று குணமடைந்து நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவால் வெள்ளியன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், மூச்சு திணறல் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரகுவன்ஸ் பிரசாத்தின் மறைவுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version