குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் பட்டேல் காலமானார்…

குஜராத்தின் முன்னாள் முதல்வரும், 6 முறை எம்.எல்.ஏ.வுமான கேஷுபாய் பட்டேல் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
Keshubhai Patel

குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், 6 முறை எம்.எல்.ஏ.வுமாய் இருந்தவர் கேஷுபாய் பட்டேல். இவருக்கு வயது 92. நேற்று காலை கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பா.ஜ.க.வில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய கேஷுபாய் பட்டேல், குஜராத்தின் சட்டமன்ற உறுப்பினராக ஆறு முறை பதவி வகித்துள்ளார். குஜராத்தில் பா.ஜ.க. சார்பாக 1995 மற்றும் 1998 முதல் 2001 வரை முதலமச்சராக பதவி வகித்தார்.

1998-ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கேசுபாய் படேல், பா.ஜ.க.வின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001-இல் கேசுபாய் படேல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால், நரேந்திர மோடி குஜராத் மாநில முதலமைச்சரானார்.

2012-ஆம் ஆண்டு பா.ஜ.க.விலிருந்து வெளியேறிய கேஷுபாய் பட்டேல், குஜராத் பரிவர்த்தன் என்ற கட்சியை நிறுவினார். 2014-ஆம் ஆண்டு நோய் காரணமாக, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

கேஷுபாய் பட்டேலின் உயிரிழப்புக்கு அரசியன் தலைவர்களும், அவரது ஆதரவாளர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கேசுபாய் பட்டேல், கடந்த மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version