இந்தியாவில் நடக்கும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டி எப்பொழுதும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக எப்பொழுது போட்டி தொடங்கும் என்பது குறித்து எந்த முடிவுகளும் அறிவிக்கப்படவில்லை.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் கடிதம் ஒன்று எழுதி அனுப்பியுள்ளார் ,அதில் கூறப்பட்டது பின்வருமாறு:

தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்சனை சீரான உடன் நம் உள்நாட்டு போட்டி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் செயல்படுத்தும், உள்நாட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் அனைவருக்கும் சுகாதாரம் பாதுகாப்பு ஆகியவை மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே ,நாங்கள் அனைத்து அம்சங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் இன்னும் சில மாதங்களில் தொற்று பாதிப்பு முழுவதாக சீரடைந்து பாதுகாப்பான சூழ்நிலை நிலவும் என்று நம்புகிறோம். அந்த சூழ்நிலையில் நாம் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பாக நடக்கும் இந்திய அணியின் வருங்கால போட்டி அட்டவணைகள் வெளியிட்டுள்ளார். அதில் இந்த வருட கடைசியில் இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்று விளையாட உள்ளது என்றும். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணி நமது நாட்டுக்கு வந்து விளையாடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீண்டும் ஐ.பி.எல்2021. போட்டி ஏப்ரல் மாதத்தில் தொடங்கி நடைபெறும் என்றும் அதன்பின் 2021-ம் ஆண்டில் T20 ஓவர் உலக கோப்பை போட்டியும் இந்தியாவிலேயே நடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார் .