விரைவில் பறக்க தொடங்குவேன் என்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கங்குலி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா :
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரங் கங்குலிக்கு கடந்த 2 ம் தேதி திடீரென நெஞ்சு வலியுடன் தலைசுற்றுதல் மற்றும் வாந்தி ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
Read more – நாடுமுழுவதும் சிகரெட் குடிப்பவருக்கான வயது வரம்பில் மாற்றம்: புதிய திட்டத்தை அமல் படுத்துகிறது மத்திய அரசு
லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் மூன்று அடைப்புகள் இருந்த நிலையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு குணமான நிலையில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கங்குலி செய்தியாளர்கள் சந்தித்து பேசியபோது கூறியதாவது; எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி, நான் இப்போது நலமாக உள்ளேன். கூடிய சீக்கிரம் பறக்கத் தொடங்குவேன் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.