இனி அமேசான் செயலி மூலம் சிலிண்டர் புக் பண்ணலாம்!!

அமேசான் மற்றும் பேடிஎம்  செயலிகள் மூலம் செல்போனிலிருந்து  கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி  அறிமுகமாகியிருக்கிறது.

சமையல் காஸ் சிலிண்டர்களை  அமேசான் மற்றும் பேடிஎம் செயலிகள் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை எண்ணை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள்வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர்களை  தற்போது விநியோகம் செய்து வருகின்றன. இதில் தமிழகத்தில் மட்டும் 2.38 கோடி வாடிக்கையாளர்கள்  இருக்கின்றார்கள். இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல்  மற்றும் நிறைவு சேவையாக அமேசான்,பேடிஎம்,  ஆகிய செயலிகளின் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை  இந்த எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலிகளில் சிலிண்டர் முன் பதிவு செய்வதற்காக உள்ள “Paybill” எனும் ஆப்ஷனில் சிலிண்டருக்கான ஆப்ஷனை தேர்வு செய்தால்  எந்த நிறுவனத்தின் சிலிண்டரை புக் பண்ண  விரும்புகின்றோம் என்ற தகவலை நாம் அங்கு அளித்த பிறகு . அதில் நாம் ஏற்கனவே  சிலிண்டர் வரவுக்காக பதிவு செய்திருந்த மொபைல் எண்ணையும் இணைக்க வேண்டும்  இதன் பிறகு முன்பதிவு செய்ய தொடங்கலாம்.

இதன்பின் எப்பொழுதும்போல்  உங்கள் பகுதியில் உள்ள கியாஸ் ஏஜென்சி மூலமாக உங்களுக்கு சிலிண்டர் வீட்டுக்கே வினியோகம் செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

,

Exit mobile version