டெல்லியில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 88% ஆக உயர்ந்துள்ளது என்று முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
டெல்லி முதல்வர் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் டெல்லியில் கொரோனா பாதிப்பு நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கணிசமாக கட்டுப்படுத்திய டெல்லியின் மாதிரி திட்டம் நம் நாட்டிலும் உலகளவிலும் விவாதிக்கப்படுகிறது. டெல்லியில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவிகிதம் 88 ஆக உள்ளது. தற்போது 9 சதவீதத்தினர் மட்டுமே கொரோனா தொற்றுடன் உள்ளனர். 2-3 சதவிதம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது.
கொரோனா பாதிப்பால் நேற்று 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் மாதத்தில் கிட்டதட்ட 100 பேர் ஒருநாளில் உயிரிழந்தனர். முன்பு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட 100- பேரில் 35 பேருக்கு தொற்று இருந்தது. தற்போது 5 பேர் என்ற அளவுக்கு தொற்று உள்ளது. இது சாதகமான விகிதம் என்று அழைக்கப்படுகிறது. மக்கள் முகக்கவசம் அணிதல் தனிமனித இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து தவறாமல் கடைபிடிக்க வேண்டும். டெல்லியில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை” என்றார்.