புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவா? எதிர்ப்பா? இன்று முதல் ஆசிரியர்கள் கருத்துகளை தெரிவிக்க அரசு அறிவிப்பு!

புதிய கல்விக்கொள்கை குறித்து இன்று முதல் வருகின்ற ஆகஸ்ட் 31 வரை ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களை இணையதளத்தில் பதிவிடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவா? எதிர்ப்பா? இன்று முதல் ஆசிரியர்கள் கருத்துகளை தெரிவிக்க  அரசு அறிவிப்பு!

மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை தொடர்பாக சமீபத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. மாணவர்களின் அடிப்படை கல்வி உரிமையினை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இதற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியது. இதில் மும்மொழிக்கல்வி அமலாக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் வெளியாகின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை தான் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்திருத்தார்.

இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை குறித்து ஆசிரியர்கள் தங்களது கருத்தினை தெரிவிக்கும் படி அனைத்து மாநில பள்ளிக்கல்வித்துறை செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதில் இன்று முதல்( ஆகஸ்ட் 24 ) ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பள்ளி ஆசிரியர்கள் பள்ளி முதல்வர்கள் கருத்தினை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் http://Innovateindia.mygov.in/nep2020 என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Exit mobile version