புதுச்சேரியில் புதிய புரட்சி… ஆய்வுக்காக பஸ்ஸில் பயணம் செய்த தமிழிசை…

புதுச்சேரியில் தனியார் பஸ்சில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்து ஆய்வை மேற்கொண்டார்.

புதுச்சேரி :

புதுச்சேரியில் சாலை, பேருந்து வசதி சரியில்லை என்பன உள்பட பல்வேறு குறைகள் தொடர்ந்து குறைகள் எழுந்த நிலையில் ஆய்வு மேற்கொள்ள ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் முடிவு செய்தார். இதையடுத்து நேற்று காலை 10.40 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை பகுதிக்கு வந்த ஆளுநர் அங்கு நின்று கொண்டிருந்த பாகூர் செல்லும் தனியார் பஸ்சில் ஏறி முன் இருக்கையில் அமர்ந்தார்.

மேலும், பஸ்சில் பயணம் செய்த பயணிகளிடம் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குறைகளை கேட்டறிந்தார் . அப்பொழுது அவருடன் பயணித்த பயணிகள் அபிசேகப்பாக்கம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை சரியில்லை என்று குறைகளை தெரிவித்தனர்.

அப்பொழுது, தவளக்குப்பம் வந்ததும் பேருந்தை விட்டு இறங்கிய தமிழிசை சவுந்தரராஜன் மற்றொரு பேருந்தில் ஏறி அபிசேகப்பாக்கம் சென்றார். அங்கிருந்து கார் மூலம் சுடுகாட்டுப்பாதையில் அமைந்துள்ள சாலையை ஆய்வு செய்த அவர், அபிசேகப்பாக்கம் வந்து அங்கிருந்து மீண்டும் தனியார் பஸ் மூலம் மரப்பாலம் சந்திப்புக்கு வந்து டிரைவர், கண்டக்டர்களின் செயல்பாடுகள் குறித்து அவர்களிடம் விசாரித்தார்.

Read more – திமுக கூட்டணியில் எந்த தொகுதி யாருக்கு ? முழு பட்டியலையும் என்று வெளியிடுகிறார் மு.க. ஸ்டாலின்

பேருந்தில் பயணம் செய்தபோது பயணிகள் தமிழிசை சௌந்தர்ராஜனுடன் செல்பி எடுத்து ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டனர்.

Exit mobile version