ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை வழங்க போதிய நிதியில்லை – மத்திய அரசு

ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை வழங்க போதிய நிதியில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை வழங்க போதிய நிதியில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மாநிலங்களைவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிவசூல் குறைவாக இருப்பதால் தற்போது மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை வழங்கமுடியாது என தெரிவித்துள்ளது.

நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில் மாநிலங்களுக்கு ஒன்றரை லட்சம் கோடி ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கு ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையாக மத்திய அரசு 11 ஆயிரத்து 700 கோடி வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version