பஞ்சாப் நேஷனல் வங்கியில் நுழைந்த கொள்ளையர்கள்…..துப்பாக்கி முனையில் பணம் கொள்ளை

பஞ்சாப் நேஷனல் வங்கியின் நுழைந்த கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் ரூ.7 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பு.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜஜ்ஜார் என்ற  மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் ரூ.7 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜஜ்ஜார் என்ற  மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் நுழைந்த மர்ம நபர்கள், காவலாளியின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு,  உள்ளே சென்று, அங்கிருந்த மக்களை அடித்துத் துன்புறுத்தி, சுமார் ரூ. 7 லட்சம் ரூபாயைக்  கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தக் காட்சிகள் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன. போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தக் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version