மகாராஷ்டிராவில், நடுத்தெருவில் கும்மாங்குத்து போட்டு டான்ஸ் ஆடும் இளம்பெண்ணின் வீடியோ தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிரா தான். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் அங்கு 9 ஆயிரத்து 18 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
புனேவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த பெண், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனாவை வென்றெடுத்த அந்த பெண்ணுக்கு அவரது தங்கை உற்சாக வரவேற்பு அளித்துள்ளார்.
கொரோனா தொற்றால், மொத்த குடும்பமும் மருத்துவமனையில் இருக்க வீடு திரும்பிய தனது அக்காவை பார்த்த மகிழ்ச்சியில், சாலையில் உற்சாக நடனமாடுகிறார், அவரது பாச தங்கை. “சில்லர் பார்ட்டி” என்ற படத்தில் வரும் ‘டாய் தை ஃபிஷ்’ என்ற பெப்பி பாடல் இசைக்க, அதற்குதான் தங்கை குத்தாட்டம் போடுகிறார்.
குஷியில் தங்கை ஆடும் இந்த டான்ஸ்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.புனேவின் ஐபிஎஸ் அதிகாரி தீபன்ஷு கப்ரா இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பலரும் ரசித்தும் வருகின்றனர்.