5G ஏலத்தில் ஊழல் முறைகேடு என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

5ஜி அலைக்கற்றை ஏலமானது ஜூலை 26ம் தேதி தொடங்கிய நிலையில் ஆகஸ்டு 1ம் தேதி முடிவடைந்தது. இதில் 20 ஆண்டுகளில் 10 பேண்ட்களில் 72,098 மெகாஹெர்ட்ஸ் (72 ஜிகா ஹெர்ட்ஸ்) அலைக்கற்றையை ஏலம் விட மத்திய அரசு முடிவுசெய்தது. இதன் அடிப்படை மதிப்பு ₹4.3லட்சம் கோடி. இந்த ஏலத்தில் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா, அதானி டேட்டா நெட் வொர்க்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன.

பார்த்தி ஏர்டெல் லிமிடெட் நிறுவனம் 900,1800,2100,3300 மெகாஹெர்ட்ஸ் & 26 கிகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 19,868 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.

ரிலையன்ஸ் ஜியோ: 700,800,1800,3300 மெகாஹெர்ட்ஸ் & 26கிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் 24,740 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.

வோடபோன் ஐடியா: 1800,2100,2500,3300 மெகாஹெர்ட்ஸ் &26 கிகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 6,228 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.

இந்த 5ஜி ஏலத்தில் 71% ₹1,50,173 கோடிக்கு (ரிலையன்ஸ் ஜியோ ₹88,078 கோடி, அதானி டேட்டா நெட்வொர்க் ₹212 கோடி, ஏர்டெல் ₹43,048 கோடி, வோடபோன் ஐடியா ₹18,799 கோடி) ஏலம் போனதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

5ஜி அலைகற்றை ஏலத்துக்கு அடிப்படை மதிப்பு ₹4.3லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 71% மட்டுமே விற்பனையான நிலையில் ₹3 லட்சம் கோடி அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ₹1,50,173 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த 5ஜி ஏலத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 2ஜி ஏலத்தையும் 5ஜி ஏலத்தையும் ஒப்பிட்டு பெரும் விவாதம் எழுந்துள்ளது.

5ஜி ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக எம்பி ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டில்,

₹5லட்சம் கோடிக்கு சென்று இருக்க வேண்டிய 5ஜி ஏலம் ₹1.50 கோடிக்குத்தான் சென்றுள்ளது. எஞ்சிய பணம் எங்கே சென்றது என்று ஒன்றிய அரசுதான் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 2ஜி புகார் வந்தபோது அப்போது, மந்திய மந்திரியாக இருந்த ஆ.ராசா பதவி விலகி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்றத்திற்கு சென்று பின் வழக்கில் இருந்து வெளியே வந்தார். தற்போதைய மத்திய மந்திரி பதவி விலகுவாரா என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த 5ஜி ஏலத்தை காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன.

Exit mobile version