”இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது”

இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்; சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது. ஜனநாயகத்தின் மரணத்தை நாம் கவனித்துக் கொண்டு இருக்கிறோம். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கி செங்கல், செங்கலாக கட்டப்பட்ட இந்தியா உங்கள் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கிறது.

மக்களின் பிரச்சனைகளான விலைவாசி உயர்வு,வேலையில்லா திண்டாட்டம், சமூகத்தில் வன்முறை போன்றவை எழுப்பப்படக் கூடாது என்பதே பாஜகவின் திட்டம். இந்தியாவில் இருக்கும் 2,3 பணக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த சர்வாதிகார ஆட்சி நடத்தப்படுகிறது.ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தை எதிர்ப்பதே எனது வேலை, அதை தொடர்ந்து செய்யப்போகிறேன். நான் எவ்வளவு அதிகமாக எதிர்க்கிறேனோ, அவ்வளவு அதிகமாக தாக்கப்படுவேன் என்று எனக்கு தெரியும். நீங்கள் (பாஜக) தாக்குவதற்கு நான் அஞ்சமாட்டேன். இவ்வாறு கூறினார்.

Exit mobile version