குடியரசு துணைத்தலைவர் தேர்தல் ஜெகதீப் தன்கர் வெற்றிபெறுவார் என எதிர்பார்ப்பு

நாட்டின் குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாஜக சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கரும்(71) எதிர்கட்சிகளின் சார்பில் மார்கரெட் ஆல்வாவும்(80) போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் எம்பிக்கள் மட்டுமே வாக்களிக்க தகுதியானவர்கள் ஆவர். நியமன எம்பிக்களும் வாக்களிக்க தகுதி உண்டு. இதன்படி மக்களை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 245பேர் என மொத்தம் 788 எம்பிக்கள் வாக்களிக்க உள்ளனர். இன்று காலை 10:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5:00 மணியுடன் நிறைவடைகிறது. இன்று மாலையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இதில் ஆளும் பாஜக அரசின் சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தன்கர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.(பாஜகவிடம் போதிய எம்பிக்கள் இருப்பதால்)

எதிர்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் மார்கரெட் ஆல்வாவுக்கு 200க்கு மேல் வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, குடியரசு துணைத்தலைவராக இருக்கக் கூடிய வெங்கைய்ய நாயுடுவின் பதவிகாலம் ஆகஸ்டு 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த தேர்தலில் 23 எம்பிக்களை கொண்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

Exit mobile version