குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு

குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றார்.

வெங்கைய நாயுடுவின் பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தனது நினைவாக பாராளுமன்ற வளாகத்தில் தனது நினைவாக சீதா அசோக மரக்கன்றை நட்டார். இந்த நிலையில் 14வது குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

ஜெகதீப் தன்கர் சில குறிப்புகள்:

*1951ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன்ஜூனு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாய குடும்பத்தில்  ஜெகதீப் தன்கர் பிறந்தார்.

*சித்தோர்கர் பகுதியில் உள்ள சைனிக் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.

*இயற்பியல் பட்டப்படிப்பை முடித்த அவர் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி பட்டம் பெற்றார்.

*மாநிலத்தின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவராக திகழ்ந்த அவர், ராஜஸ்தான் ஐகோர்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஆகிய இரண்டிலும் பயிற்சி பெற்றுள்ளார்.

*1988ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனதாதளம் சார்பில் சொந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆனார்.

*1990ம் ஆண்டு பாராளுமன்ற இணை அமைச்சராக பதவியேற்றார்.

*1993ம் ஆண்டு அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கிஷன்கர் தொகுதியில் இருந்து ராஜஸ்தான் சட்டசபைக்கு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

*2019ம் ஆண்டு மேற்குவங்க கவர்னராக நியமிக்கப்பட்டார்.

*2022 ஜூலை 17ம் தேதி மேற்குவங்க கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார்.

*2022, ஆகஸ்டு 11ம் தேதி(இன்று) குடியரசு துணைத்தலைவராக பதவியேற்றுக்கொண்டார்.

Exit mobile version