பிரபல செய்திவாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி மறைந்தார்

அகில இந்திய வானொலி செய்தி தொடர்பாளர் சரோஜ் நாராயணசாமி நேற்று காலமானார்.

அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகளாக தமிழ் செய்திப்பிரிவில் பணியாற்றியவர் சரோஜ் நாராயணசாமி.

தலைநகர் டெல்லியில் தமிழ் பிரிவில் பணியாற்றிய இவர் 1995ம் ஆண்டு ஓய்வுபெற்றார். 70’s கிட்ஸ் முதல் 80’s கிட்ஸ் வரை இவரது கம்பீர குரலுக்காகவும், உச்சரிப்பிற்காகவும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. மும்பையில் வசித்து வந்த இவர் வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version