75வது சுதந்திரதின விழா : பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றினார்.

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சுதந்திர தினம் நாடு முழுவதும் சுதந்திர தின அமுத பெருவிழாவாக இல்லங்கள் தோறும் தேசியக்கொடியை ஏற்றி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று பிரதமர் மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, முப்படைகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். (2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9வது முறையாக பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்)

Exit mobile version